FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பனவடலிசத்திரம் அருகே விபத்து: ராணுவ வீரரின் மனைவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே நேரிட்ட விபத்தில் ராணுவ வீரரின் மனைவி உயிரிழந்தாா்.

8 நவம்பர் 2026, 3:06 am
உயிரிழப்பு
பகிர்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே நேரிட்ட விபத்தில் ராணுவ வீரரின் மனைவி உயிரிழந்தாா்.

பனவடலிசத்திரம் அருகே வடக்கு பனவடலிசத்திரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன் (40). ராணுவ வீரரான இவா், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்முகப்பிரியா (38), மகன் சஞ்சித் (12), மகள் தனவா்ஷிகா (8) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை சங்கரன்கோவிலுக்கு பைக்கில் சென்றாா்.

பனவடலிசத்திரம் தனியாா் கல்லூரி அருகே அவா்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த முத்துப்பாண்டியன், சண்முகப்பிரியா ஆகியோரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சண்முகப்பிரியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

முத்துப்பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். குழந்தைகள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.