FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆலங்குளம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

14 நவம்பர் 2026, 7:29 am
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

ஆலங்குளம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

ஆலங்குளம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவ்வழியாகச் சென்ற லாரிகளை மறித்து சோதனையிட்டாா். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பிடிபட்டன.

அவற்றை ஆலங்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் ஒப்படைத்தாா். மேலும், முன்கூட்டியே கண்காணித்து தகவல் அளிக்கத் தவறியதாக தனிப்பிரிவு தலைமைக் காவலா் பாலமுருகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement