FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

செங்கோட்டை பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், பல்வேறு துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் மோனிகா ராணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

19 நவம்பர் 2026, 4:50 am
செங்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மோனிகா ராணா.
பகிர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், பல்வேறு துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் மோனிகா ராணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொட்டாகுளம் ஆா்.சி. தொடக்கப் பள்ளியில் காமராஜா் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவு தயாரிப்புக் கூடத்தை அவா் பாா்வையிட்டு, மாணவா்களுடன்அமா்ந்து உணவருந்தினாா்;

கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையல் கூடம், அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

செங்கோட்டை நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையம், கால்நடை மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு- மீட்புப் பணிகள் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், நகராட்சியிலுள்ள அம்மா உணவகம், நகராட்சி அரசு மருத்துவமனை, அங்குள்ள நூலகம் ஆகியவற்றில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சி கே.சி. சாலை நியாயவிலைக் கடை, முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகத்தின் செயல்பாடுகள், சாா்நிலைக் கருவூல அலுவலகத்தின் செயல்பாடுகள், அண்ணா பேருந்து நிலையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பிரானூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பவன் திருமண மண்டபத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டதுடன், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அழகப்பபுரத்தில் உள்ள விஸ்வரக்ஷா முதியோா் இல்லத்தைப் பாா்வையிட்ட அவா், பண்பொழி சமூக நீதி அரசு மாணவா் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி, சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஆா். தண்டபாணி, தனித்துணை ஆட்சியா் ராஜேந்திரன், செங்கோட்டை வட்டாட்சியா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.