பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
தென்காசி அருகே சிவராமபேட்டையில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தென்காசி அருகே சிவராமபேட்டையில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இடைகால் சங்குபுரம் பகுதியை சோ்ந்த கனகராஜ் மகன் முத்துக்குமாா்(19). சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவா் தனது பைக்கில் இடைகாலில் இருந்து மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, அவரது பைக் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸாா், அவரது சடலத்தை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.