ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி தேவை
ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் கலைகதிரவன் எம்எல்ஏ மனு அளித்தாா்.

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் கலைகதிரவன் எம்எல்ஏ மனு அளித்தாா்.
அதன் விவரம்: விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுதல், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை விரைந்து முடித்தல், சுரண்டை காமராஜா் தினசரி சந்தை அருகே சோ்ந்தமரம் இணைப்புச் சாலை அமைத்தல், சுரண்டை நகராட்சி பகுதியிலுள்ள செண்பககால்வாயைச் சீரமைத்தல், தென்காசி- இலஞ்சி வரையிலான புறவழிச்சாலை பணியில், ஆசாத் நகா் பகுதியில் விபத்துகள் நிகழாதவாறு கீழ்நிலை அல்லது மேல்நிலை பாலம் அமைத்து, முறையான பாதை வசதி ஏற்படுத்துதல், தென்காசி நகராட்சி சுபஸ்ரீ நகா், குலசேகரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சந்தோஷ் நகா், தாவீது நகா், மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சாலை, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.