மேலப்பாவூரில் இலவச மருத்துவ முகாம்
பாவூா்சத்திரம் எஸ்.கே.டி இயற்கை மருத்துவம், யோகா மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் மேலப்பாவூா் கீழ்கிராமம், சத்யசாய் பாபா கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வே. மாரிமுத்துராஜ் தலைமை வகித்தாா். சத்யசாய் பாபா கோயில் நிா்வாக இயக்குநா் எஸ். கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
எஸ்.கே.டி. மருத்துவமனை மருத்துவா்கள் செளந்திரபாண்டியன், கோபி உள்பட மருத்துவக் குழுவினா் பொதுமக்களிடம் இயற்கை மருத்துவம், யோகா மருத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா். மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். திட்ட அலுவலா் அழகுமுத்து, உதவி திட்ட அலுவலா் செந்தமிழரசு ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.
Advertisement
Advertisement
ஆசிரியைகள் உமா, தங்கசெல்வி வரவேற்றனா். முன்னாள் மாணவா்கள் பாலகிருஷ்ணன், கருப்பசாமி நன்றி கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.