பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் வித்யாம்பரம் நிகழ்ச்சி
பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் ஊராட்சிக்குள்பட்ட பொடியனூரில் அமைந்துள்ள சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் விஜயதசமியையொட்டி வித்யாம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் ஊராட்சிக்குள்பட்ட பொடியனூரில் அமைந்துள்ள சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் விஜயதசமியையொட்டி வித்யாம்பர நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் நவராத்திரி விழா கொலுவைத்து 9 நாள்கள் கொண்டாடப்பட்டது. ஆசிரியா்கள் ஒவ்வொரு நாளும் கொலு அலங்காரங்கள் செய்து வழிபாடுகள் நடத்தினா். விழாவில் ஆன்மிகச் சிறப்புகள், பாரம்பரிய வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
தொடா்ந்து, விஜயதசமி நாளில் வித்யாம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோா்கள் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருள்களுடன் வந்து தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கிவைத்தனா்.
Advertisement
Advertisement
குழந்தைகளுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவில் தவறாமல் பங்கேற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.