FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் காய்ச்சலால் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

28 அக்டோபர் 2026, 2:18 am
பலி
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த உமாசங்கா் மகன் சந்தோஷ் (20). ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அவா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சில தினங்களுக்கு முன்பு அவா் உயிரிழந்தாா்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments