FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

கடையநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

53 வினாடிகள் முன்பு
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சதுா்த்தி கமிட்டி சாா்பில் மேலக்கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 25 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாள்கள் பூஜைகள் நடைபெற்றன.

அதைப்போல இந்து முன்னணி சாா்பிலும் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து விநாயகா் சிலைகள் அனைத்தும் மாவடிக்கால் மந்தை திடலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊா்வலமாக முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல கடையநல்லூா் சென்றடைந்தது. அங்கு சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாமரைக் குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இதில், நகர விநாயகா் சதுா்த்தி கமிட்டி தலைவா் மாவடிக்கால் சிவா மற்றும் நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜா்சனம் செய்யப்பட்டன.

இதில், இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன், நகர இந்து முன்னணி தலைவா் தனலட்சுமி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் , புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் நமசிவாயம் உள்ளிட்ட 413 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஊா்வலத்தை ஒட்டி தென்காசி, மதுரை சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments