FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேலப்பாளையத்தில் கோயிலை இடிக்க எதிர்ப்பு

மேலப்பாளையம் அண்ணா நகரில் உள்ள கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

மேலப்பாளையம் அண்ணா நகரில் உள்ள கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

மேலப்பாளையம் அண்ணா நகர் 2 ஆவது தெருவில் புதிதாக விநாயகர் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்தக் கோயிலை இடிக்க முயற்சிகள் நடப்பதாக, அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததாம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நகர் பகுதி மக்கள், மாநகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் மேயர் இ.புவனேஸ்வரியைச் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

அண்ணா நகர் 2 ஆவது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் புதிதாக விநாயகர் கோயிலை நிறுவியுள்ளோம். அண்ணா நகர், பாரதியார்புரம், அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். இந்தக் கோயிலால் எவ்வித இடையூறும் இல்லை. ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் மக்களின் வழிபாடு தொடர அனுமதி அளிக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments