FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அர்ச்சகர் பயிற்சியில் பெண்களையும் சேர்க்க வேண்டும்

அர்ச்சகர் பயிற்சியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

அர்ச்சகர் பயிற்சியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார்.
குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து பலரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகள்படி அர்ச்சகர்கள் நியமனம் இருக்க வேண்டும்; ஆகம விதிகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து ஆகம விதிகள்படி இரண்டு பள்ளிகள் உருவாக்கப்பட்டு, அதில் 210 அர்ச்சகர்கள் பயிற்சி முடித்து வெளியே வந்தனர். தற்போது அவர்களில் ஒருவர்  மதுரை கோயிலில் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற நியமனங்கள் நடைபெறும் என அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. அர்ச்சகர்கள் நியமனத்தை காலதாமதமின்றி தொடர்ந்து அரசு செயல்படுத்த வேண்டும். 
நிறுத்திவைக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடர்ந்து நடைபெறவேண்டும். அப்பள்ளி தொடரும் போது, பெண்களையும் அர்ச்சகர் பயிற்சியில் சேர்த்து, பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். சிலை திருட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. மாநில அரசின் மீது நம்பிக்கையில்லை, சிபிஐ விசாரணை வேண்டும் என்பது ஒரு முறை. இது சர்வதேச விவகாரம் சம்பந்தப்பட்டது என்பதால் சிபிஐ விசாரணை மேற்கொள்வது சுலபமாக இருக்கும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். அதேவேளையில் குற்றவாளிகள் அல்லாத நபர்கள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது. எனவேதான் இந்த வழக்கை சிபிஐ  விசாரணை மேற்கொள்ள முழு தகுதி பெற்றிருக்கிறது. இதனை திராவிடர் கழகம் முழு மனதோடு வரவேற்கிறது என்றார் அவர்.
பேட்டியின் போது திருநெல்வேலி மேற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன், நகர செயலர் சாதிர், ராமராஜ், சீவநல்லூர் சாமித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments