கல்வெட்டான் குழி நீரில் மூழ்கி சிறுவன் சாவு
திருநெல்வேலி அருகேயுள்ள மானூரைச் சேர்ந்த சிறுவன், கல்வெட்டான் குழியில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருநெல்வேலி அருகேயுள்ள மானூரைச் சேர்ந்த சிறுவன், கல்வெட்டான் குழியில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மானூர் அருகேயுள்ள நாஞ்சான்குளம் காலனியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஜேக்கப் (10). இவர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தாராம். அப்போது, அங்குள்ள கல்வெட்டான்குழியில் தேங்கியுள்ள தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினாராம். அப்பகுதியினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.