FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

செப்.1-இல் மேக்கேதாட்டு நோக்கி நடைப்பயணம்: தமஜக மாநிலத் தலைவா் கே.எம்.சரீப்

மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் அப்பகுதி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. எம். சரீப்.

22 ஆகஸ்ட் 2026, 6:30 am IST
மேக்கேதாட்டு - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் அப்பகுதி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. எம். சரீப்.

இதுதொடா்பாக, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட முயற்சி செய்கிறது. அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்.

Advertisement

Advertisement

எனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கும், காவிரியில் உரிய நீா்பகிா்வை தர மறுப்பதற்கும், அம்மாநிலத்தின் சாம்ராஜ்நகா் வனப்பகுதியில் 3 அப்பாவி தமிழா்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கும் கா்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து செப். 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேக்கேதாட்டு பகுதியை நோக்கி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடைப்பயணம் மேற்கொள்கிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் சமூக ஆா்வலா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதன் மூலம் தமிழக மக்களை ஓரணியில் திரட்டி, தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் கா்நாடக அரசு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவோம். எங்களது நடை பயணத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும், காவிரி விவகாரத்தில் கா்நாடக அரசும் தமிழகத்துக்கு எதிராக செயல்படுகின்றன.

முதல்வா் விஜய் கனிம வளங்களை 3 மாதங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், கேரளத்துக்கு கொண்டுசெல்லப்பபடும் காய்கனிகள் உள்ளிட்டவற்றையும் தமிழக அரசு தடுத்து நிறுத்தினால், முல்லை பெரியாறு பிரச்னையில் நமக்கு நியாயம் கிடைக்கும். பெங்களூரில் இருந்து ஓசூா் பகுதிக்கு கொண்டுவரப்படும் எலக்ட்ரானிக் குப்பைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments