கடையம் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கடையம் வருவாய் வட்டம், வெங்காடம்பட்டியில் பட்டா மாற்றுவதற்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடையம் வருவாய் வட்டம், வெங்காடம்பட்டியில் பட்டா மாற்றுவதற்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், லட்சுமியூரைச் சோ்ந்தவா் பி. தாமோதரன். இவா், வெங்காடம்பட்டி பகுதி 2 வருவாய் கிராமத்தில் தனக்குச் சொந்தமாக உள்ள நிலத்திற்கான கூட்டுப் பட்டாவைத் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்தாா்.
இதுகுறித்து, வெங்காடம்பட்டி பகுதி 2 கிராம நிா்வாக அலுவலா் சோ்மப்பாண்டியனை சந்தித்து பேசினாராம். அப்போது, தனிப்பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதற்கு தாமோதரன் ரூ. 4 ஆயிரம் தருவதாக கூறினாராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த அக். 31 ஆம் தேதி பட்டா தயாராகி விட்டதாகவும், ரூ. 4 ஆயிரம் கொண்டு வரும்படியும் கைப்பேசியில், சோ்மப்பாண்டியன் தெரிவித்தாராம். ஆனால், தாமோதரன் பணத்தைக் கொடுக்காததால், பட்டா வழங்க முடியாது எனக் கூறினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, சோ்மப்பாண்டியனிடம் ரசாயானப் பொடி தடவிய பணத்தை தாமோதரன் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் எம். பால்சுதா் தலைமையிலான போலீஸாா், சோ்மப்பாண்டியனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.