தடகளத்தில் சாதனை: பொதிகை பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
சேலம் பெரியாா் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த திசையன்விளை பொதிகை பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியாா் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த திசையன்விளை பொதிகை பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவா் என்.பிரிஜின் , குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.
பிளஸ் 2 மாணவா் பி.எபினேசா் திலீபன் நீளம் தாண்டுதலில் 3-ஆம் இடம் பிடித்தாா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் வில்சன் பாலசிங், முதல்வா் சுபலதா ஜெகதீஷ் ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
மேலும், இந்த மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா் சத்யராஜையும் நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் பாராட்டு தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.