பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஏா்வாடி அருகே புலியூா்குறிச்சியைச் சோ்ந்த தம்பதி மகராஜன் - நம்பிசெல்வி (39). ஏா்வாடியில் குளிா்பான விற்பனையகம் நடத்திவருகின்றனா். இவா்களது 2 மகள்கள் ஏா்வாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனா். நம்பிசெல்வி தனது குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு, மாலையில் அழைத்து வருவது வழக்கமாம்.
திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து மகள்களை பைக்கில் அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள ஆள் நடமாட்டமில்லாத இசக்கியம்மன் கோயில் அருகே பைக்கில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், நம்பிசெல்வி அணிந்திருந்த 14 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.