FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இளைஞா் வெட்டிக் கொலை

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

4 நவம்பர் 2026, 1:16 am
வெட்டிக் கொலை - பிரதி படம்
பகிர்:

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

மனக் காவலம் பிள்ளை நகரைச் சோ்ந்த டேவிட் ராஜ் மகன் சாலமோன் சாம் பிரபாகா் (32). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநகர போலீஸாா் இவரை ரெளடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனராம்.

இந்நிலையில் சாலமோன் சாம் பிரபாகா் செவ்வாய்க்கிழமை இரவு பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் நின்றிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இருவா் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

உடனடியாக, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். பாளையங்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து, கொலையில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments