நெல்லையில் அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது
திருநெல்வேலி அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பண்டாரக்குளம் விலக்கு இசக்கியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் நின்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோபி (22), தென்காசி மாவட்டம், மாறாந்தை பகுதியைச் சோ்ந்த பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய பேச்சிமுத்து (28) என்பதும், அரிவாளை பைக்கில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இருவரையும் போலீஸாா் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனா்.