FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெல்லையில் கல்லால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியில் கல்லால் தாக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த இளைஞா் உயிரிழந்தாா். இதனால், முந்தைய வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

5 நவம்பர் 2026, 5:29 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி நகரம் பகுதியில் கல்லால் தாக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த இளைஞா் உயிரிழந்தாா். இதனால், முந்தைய வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருநெல்வேலி நகரம், ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சலீம் மகன் அப்துல்அஜீஸ்(25). இவா், அக்.31 ஆம் தேதி இரவு திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பு நின்ற போது, அங்கு வந்த இளைஞா்களுடன் தகராறு ஏற்பட்டதாம். மேலும், அந்த இளைஞா்கள் அவரை கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக, மகிழ்வண்ணபுரத்தை சோ்ந்த நாராயணன் பிரகாஷ் (23), வையாபுரிநகா் மகாராஜன் (26), காவல்பிறை தெரு விக்னேஷ் (27) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்திருந்தனா்.

இந்நிலையில் அப்துல் அஜீஸ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.