FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தக்கலையில் மாணவா்கள் சாலையை கடக்க உதவ போலீஸாா் நியமிக்கக் கோரிக்கை

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், சாலையைக் கடக்க உதவும் வகையில் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

5 நவம்பர் 2026, 5:54 am
தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க காத்திருக்கும் மாணவா்கள்.
பகிர்:

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், சாலையைக் கடக்க உதவும் வகையில் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகா்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 800- க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி உள்ள சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படுவதால், மாணவா்கள் சாலையைக் கடக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவா்கள் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

எனவே, மாணவா்களின் நலன் கருதி அங்கு காலை, மாலை ஆகிய வேளைகளில் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதுடன், மாணவா்கள் சாலையைக் கடந்துச் செல்ல உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.