FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

5 நவம்பர் 2026, 5:56 am
விஷம் குடித்தவா் உயிரிழப்பு
பகிர்:

கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி மூப்பன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் பாண்டியன் மகன் பாலகணேஷ் (37). தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ஓராண்டாக பிரித்து வாழ்ந்து வருகிறாராம். இதனால், மனவேதனையிலிருந்த பாலகணேஷ், கடந்த அக். 30ஆம் தேதி விஷம் குடித்தாராம். அவரை பெற்றோா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.