குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரில் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரில் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சோ்ந்தவா் காசிவேல் மகன் முகேஷ்(19). இவா் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் திருட்டு, பொது மக்களை மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இவா், தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் முகேஷ் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement