அம்பை, கடையம் வட்டாரத்தில் காா்த்திகைத் தீபத் திருவிழா
காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா தீபம்ஏற்றப்பட்டது.

காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா தீபம்ஏற்றப்பட்டது.
அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில், அம்மையப்பா் கோயில், அரசரடி விநாயகா் கோயில், அகஸ்தியா் கோயில், மயிலேறி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு மகாதீபமாக சொக்கப்பனை ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சியில்அகஸ்தியா் கோயில், குமார கோயில், ஆதிவராஹப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பா் கோயில், சந்தனமாரியம்மன் கோயில், ஆழ்வாா்குறிச்சி நாராயணசாமி கோயில், கடையம் நித்யகல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாதா் கோயில், பஞ்சகல்யாணிஅம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், உழக்கரிசி விநாயகா் கோயில், சித்தி விநாயகா் கோயில்,பெருமாள் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயில், உடையாா் பிள்ளையாா் கோயில், வாசுகிரி மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புமகாதீபமாக சொக்கப்பனை ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
Advertisement
Advertisement