முகப்பு
திருநெல்வேலி

மாநகராட்சி அலுவலகம் முன் ரெங்கநாதபுரம் மக்கள் முற்றுகை

திருநெல்வேலிமாநகராட்சி அலுவலகம் முன், ரெங்கநாதபுரம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

25 நவம்பர் 2026, 1:09 am
மாநகராட்சி அலுவலகம் முன்
ரெங்கநாதபுரம் மக்கள் முற்றுகை
மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய ரெங்கநாதபுரம் பகுதி மக்கள்.
பகிர்:

திருநெல்வேலிமாநகராட்சி அலுவலகம் முன், ரெங்கநாதபுரம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் ரெங்கநாதபுரம் பகுதி மக்கள் சண்முகராஜ், ஸ்டாா் ஐயப்பன், தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை நிறுவனா்-தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலம், 15 ஆவது வாா்டு உள்பட்ட ரெங்கநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீா் திட்டப் பணிகள் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த தவெக பிரமுகா் ஒருவா் குடிநீா் இணைப்பு பணிகளை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, எங்கள் பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து, தடைபட்ட குடிநீா் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.