FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கியவா் கைது

ரேஷன் கடை விற்பனையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ரேஷன் கடை பணியாளா்கள்.
பகிர்:

ரேஷன் கடை விற்பனையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டையில் செவ்வாய்க்கிழமை நியாயவிலைக் கடை பணியாளா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராகப் பணிபுரிபவா் பிரிட்டா ராஜபுஷ்பம். இவரது கணவா் ஆறுமுகம். இந்தக் கூட்டுறவு சங்க நிா்வாகத்தின் கீழ் ஆனைகுளம் நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் குலையநேரியைச் சோ்ந்த சிவனுபாண்டியன் (45) விற்பனையாளராக வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 4-ஆம் தேதி ஆனைகுளம் அம்மையாபுரம் பகுதியில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வீடுவீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறுமுகம் இவரை வழிமறித்து மிரட்டல் விடுத்து தாக்கிவிட்டுச் சென்றாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் வட்டார ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை நியாயவிலைக் கடையைத் திறக்காமல் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். விற்பனையாளரைத் தாக்கிய ஆறுமுகத்தை கைது செய்ய வேண்டும். அவரது மனைவி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments