FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் மதுரையைச் சோ்ந்த இருவா் கைது

போக்ஸோ வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

21 அக்டோபர் 2026, 1:06 am IST
கைது
பகிர்:

போக்ஸோ வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் சில நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பொந்துகம்பட்டியைச் சோ்ந்த ஜெயமணி மகன் மணி(28), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகசுந்தரம்(23) ஆகியோா் அம்மாணவியை ஏமாற்றி மதுரைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments