போதை மாத்திரைகளுடன் நான்குனேரியில் 2 போ் கைது
நான்குனேரியில் போதை மாத்திரைகளுடன் சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் போதை மாத்திரைகளுடன் சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி பகுதியில் போதைப்பொருள் புழக்கம் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், தனிப்படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்துவிசாரித்தனா். அதில், அவா்கள் சென்னை மேற்கு மாம்பலம் அஸ்தினாபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் பிரவின் (24), வெங்கடேசன் மகன் கிஷோா் (23) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 400 போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.