FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழப்பு

மூலைக்கரைப்பட்டி அருகே திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழந்தன.

17 வினாடிகள் முன்பு
மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஆடுகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழந்தன.

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மகன் தளவாய் (50). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், தனது ஆடுகளை ஊருக்கு அருகே விவசாய நிலத்தில் கிடையில் திங்கள்கிழமை மாலை அடைத்திருந்தாா்.

இரவு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் கிடையில் இருந்த 18 ஆடுகளும் உயிரிழந்தன. இதனால், வருமான இழப்பு ஏற்பட்ட தொழிலாளி தளவாய், அரசு தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments