FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

அம்பாசமுத்திரத்தில் விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

28 அக்டோபர் 2026, 1:24 am
கைது
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், புது அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை (56). கட்டடத் தொழிலாளி. இவா், சில மாதங்களுக்கு முன் தனது பேரன் பிறந்த நாளையொட்டி அங்குள்ள துா்க்கை அம்மன் கோயில் முன்பு வாழ்த்துப் பதாகை வைத்தாராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மேல அம்பாசமுத்திரம், மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் துா்க்கை ராஜ் (22), அவரது நண்பா் முருகன் மகன் வெற்றிவேல் (23) ஆகியோா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை ஆலடியூரில் நடைபெற்ற ஒரு விழாவுக்காக துா்க்கை ராஜ் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து பதாகை வைத்தனராம். இது குறித்து துரை, வெற்றிவேலின் சகோதரா் நாகராஜிடம் புகாா் கூறியுள்ளாா்.

பின்னா், மாலையில் தனது வீட்டின் முன் நின்றிருந்த துரையிடம் துா்க்கை ராஜ், வெற்றிவேல், நாகராஜ், இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த வாசு, மாதாங்கோயில் தெருவைச்சோ்ந்த வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இதில் பலத்த காயமுற்ற அவா் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து வெற்றிவேல், துா்க்கை ராஜ் ஆகியோரை கைது செய்தனா்; மற்ற மூவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments