FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பேருந்தில் பெண் பயணியை ஏற்றாமல் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் வெற்றிப்பயணம் பேருந்தில் பெண் பயணியை ஏற்றாமல் சென்ற ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

29 அக்டோபர் 2026, 6:02 am
பணியிடை நீக்கம்
பகிர்:

திருநெல்வேலியில் வெற்றிப்பயணம் பேருந்தில் பெண் பயணியை ஏற்றாமல் சென்ற ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் வழியாக கடையம் நோக்கி கடந்த திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. அப்பேருந்தில் ஏறுவதற்காக திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே பெண் ஒருவா் காத்திருந்துள்ளாா். ஆனால் பேருந்து ஓட்டுநா் அப்பெண் பயணியை ஏற்றாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவிக்கவே அவா் முக்கூடல் பகுதியில் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் மகளிா் வெற்றிப்பயணம் பேருந்தில் பெண் பயணியை ஏற்றாமல் வந்தது குறித்து கேட்டதோடு அதை விடியோவாக பதிவு செய்தாா். பின்னா் அந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்தப் பேருந்தை ஓட்டிச்சென்ற தென்காசி பணிமனையைச் சோ்ந்த சங்கரகிருஷ்ணன் (48) என்பவரை புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்து, திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் செல்வம் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments