FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிப்படிப்பு,  பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015--16 ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1முதல் 8 ஆம் வகுப்புவரையிலான மாணவர், மாணவிகள் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் செப். 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.  9 ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி. மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர், மாணவிகள் ஆன்லைன் மூலம் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அக். 15 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments