FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடப்பிரச்னையில் மோதல்: 2 பேர் கைது

சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில்   ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில்   ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

அமுதுண்ணாக்குடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது சகோதரர் அர்ஜூனபாண்டியன். இவர்களுக்கிடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில் குருநாதன், அவரது மனைவி ஜெயராணி, மகன் தினகரன் (25) ஆகியோர் அர்ஜூனபாண்டியனின் மகள் தங்கலட்சுமியை வெள்ளிக்கிழமை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதையடுத்து தினகரனுக்கு அர்ஜூனபாண்டியனும் (60) கொலை மிரட்டல் விடுத்தாராம்.  இதுகுறித்து தங்கலட்சுமி, தினகரன் ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர்  எழிலரசன் வழக்குப் பதிந்து அர்ஜூனபாண்டியன், தினகரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments