FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் இன்று ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை(ஜூலை 22) ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

24 ஜனவரி 2024, 11:16 pm
பகிர்:

ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை(ஜூலை 22) ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு தாமிரவருணி நதிக் கரையோரம் காந்தீஸ்வரத்தில் ஏகாந்தலிங்க சுவாமி சமேத அறம் வளர்த்த நாயகி அம்பாள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள் நடத்தப்பட்டுகிறது. நிகழாண்டு ஆடி வெள்ளிக்கிழமைகளில் அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், லலிதா சகஸ்கர நாம பாராயணம் மற்றும் குங்கும அர்ச்சனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

இதில், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5ஆம் தேதி அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு வளையல் அலங்காரம், லலிதா சகஸ்கர நாம பாராயணம் மற்றும் குங்கும அர்ச்சனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments