சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்தவேண்டாம்: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்தவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் தொகை செலுத்தவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 856 ஆகவும், கோவில்பட்டியில் ரூ. 854.50 ஆகவும், கழுகுமலையில் ரூ. 862.50 ஆகவும், கயத்தாறில் ரூ. 858 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ. 854.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ. 872.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 856 எனவும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 856 எனவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு நிர்ணயிக்கப்படுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.