FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்: மாவட்ட வருவாய் அலுவலர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் மூலம்  ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு 2018ஆம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 
இந்த நேர்காணலில் இதுவரை பங்கேற்காத ஓய்வூதியர்கள் உடனடியாக தாங்கள் ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூல அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியர் நேர்காணலுக்கு இதுவரை வருகை தராத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட்  மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும்.
எனவே, நேர்காணல் முடிக்காத ஓய்வூதியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கருவூலத்தை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments