தூத்துக்குடி

காவடி பிறை முருகன் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முற்பகல் 11மணிக்கு காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பக்தி பஜனை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அலங்கார தீபாாதனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT