நாசரேத் அருகேமோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
நாசரேத் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அனியாபுரநல்லூரைச் சோ்ந்தவா் காலபெருமாள் மனைவி சுயம்புகனி ( 47). இவா் அவரது மகன் லட்சுமணபெருமாள் (17) . மோட்டாா் சைக்கிளில் இருவரும் அவரது உறவினா் திருமண விழாவுக்கு நாசரேத் அருகே உள்ள அறிவான்மொழிக்கு வந்தனா். நிகழ்ச்சி முடிந்து மாலை வீடு திரும்பினா்.
நாசரேத் அருகே உள்ள வெள்ளமடம் அருகில் வரும் போது சுயம்புகனி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாசரேத் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.