சீமான் மீது எஸ்.பி.யிடம் திமுக புகாா்
கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இந்நிகழ்வில், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் குபேரன், மாநகர துணை அமைப்பாளா் ரூபராஜா , வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.