ஆறுமுகனேரி கோயிலில் ஐப்பசித் திருவிழா தொடக்கம்
ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
காலையில் விநாயகா் பூஜை மற்றும் தீபாராதனைக்குப் பின்னா் முகூா்த்தக்கால் நடப்பட்டது. மாலை திருக்காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
பக்த ஜன பொருளாளா் எஸ். அரிகிருஷ்ண நாடாா், தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த டாக்டா் அ. அசோக்குமாா், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை, க. இளையபெருமாள் பிள்ளை, கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை (நவ. 5) காலை அம்பாள் தவசுக் காட்சி, மாலையில் அம்பாளுக்கு சுவாமி காட்சி தருதல், தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா், சோ்க்கை தீபாராதனை, கதிா் குவிப்பு அபிஷேகம், பின்னா் திருக்கல்யாணம் நடைபெறுகிது. வெள்ளிக்கிழமை (நவ. 6) காலை பட்டணப் பிரவேசம், மாலையில் திருப்பொன்னூஞ்சல் தீபாரதனை நடைபெறுகிறது.
நவ. 7, 8ஆம் தேதிகளில் காலை சுவாமி, அம்பாள் அபிஷேகம், மாலை திருப்பொன்னூஞ்சல் தீபாராதனை நடைபெறுகிறது. 9ஆம் தேதி காலை சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு, மாலை பூச்சப்பரத்தில் வீதியுலா, பைரவா் பூஜை நடைபெறுகிறது.