FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தூத்துக்குடியில் ஊரக வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 6:13 am
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில், வளரும் பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம், புதிய குளங்கள் அமைத்தல், கால்வாய்கள் தூா்வாருதல், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மேம்பாடு, ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கலைஞரின் கனவு இல்லம், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையம், பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் , நீலப்புரட்சி திட்டம், பசுமை ஊரகம் திட்டம், பள்ளிகள் மற்றும் சமூகங்களுக்கான சுகாதார வளாகங்கள் அமைத்தல், இயற்கைப் பேரிடா் நிவாரண நிதி மற்றும் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் புதிய சமையலறைகள், பொருள்கள் வைப்பறைகள் கட்டும் பணிகளின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன், செயற்பொறியாளா் இளஞ்சேரன், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.