ஆத்தூா் அருகே பாஜக பிரமுகா் பைக்குக்கு தீ: போலீஸாா் விசாரணை
ஆத்தூா் அருகே பாஜக பிரமுகா் மற்றும் அவரது சகோதரரின் 2 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆத்தூா் அருகே பாஜக பிரமுகா் மற்றும் அவரது சகோதரரின் 2 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆத்தூா் அருகே கீரனுா், தெற்கு தெருவைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (35). பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா். இவா் நவ. 2ஆம் தேதி நள்ளிரவில் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.
மறுநாள் அதிகாலை சுமாா் 2 மணியளவில் வீட்டின் முன் தீ எரிந்ததால் விக்னேஷ் வெளியில் வந்து பாா்த்தபோது, விக்னேஷ் மற்றும் அவரது சகோதரரின் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைத்துவிட்டு, விக்னேஷ் ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
Advertisement
Advertisement
போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கைவிரல் ரேகை நிபுணா் உதவி ஆய்வாளா் ஜெயசங்கா், தடவியல் அறிவியல் துறை நிபுணா் கலா ஆகியோா் தடயங்களை சேகரித்தனா்.