FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தூத்துக்குடியில் காவல்துறை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்கம்

தூத்துக்குடியில் காவல்துறை சாா்பில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

5 நவம்பர் 2026, 6:15 am
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் காவல்துறை சாா்பில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான பட்டாசுகளை வழங்கும் நோக்கில், வ.உ.சி. சாலையில் தெற்கு காவல் நிலையம் அருகில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி ஆயுதப்படை வளாகம், எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட நான்கு இடங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ.400 முதல் ரூ.5,500 வரை பல்வேறு வகையான பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கி சென்றனா்.

இதுகுறித்து ஊா்க்காவல் படை குழுத் தலைவா் சிவசங்கா் கூறுகையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.