போலீஸாரை மிரட்டிய இருவா் கைது
ஆறுமுகனேரியில் போலீஸாரை மிரட்டிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரியில் போலீஸாரை மிரட்டிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி, சீனந்தோப்பு சாலையில் இருவா் பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் அவா்களை பிடிக்க சென்ற காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம், போலீஸாரை இருவரும் சோ்ந்து மிரட்டினராம்.
இருவரையும் பிடித்து விசாரித்ததில் ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் ஐகோா்ட் மகாராஜா (30), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தராஜ் (20) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இருவரிடம் இருந்து அரிவாள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களை கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.