FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரியலூர் அருகே சுகாதாரமான குடிநீர் கோரி சாலை மறியல்

அரியலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் நீர் கலந்து வருவது குறித்து ஊராட்சித் தலைவரிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஜயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments