சித்தர் பாட்டியை மீட்டுத் தர கிராமத்தினர் கோரிக்கை
சித்தர் பாட்டியை மீட்டு எங்களிடம் ஒப்படையுங்கள் என நொய்யலைச் சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதி மருத்துவர் நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
சித்தர் பாட்டியை மீட்டு எங்களிடம் ஒப்படையுங்கள் என நொய்யலைச் சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதி மருத்துவர் நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர் சித்தர் பாட்டி (95). இவர் அதே பகுதியில் அருள்வாக்கு கூறி வந்தார்.
அவரின் வார்த்தைகள் அனைத்தும் பலித்ததால் வயதான அவரைப் நொய்யலைச் சேர்ந்த மருத்துவர் கா. நடராஜன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தனது தோட்டத்துக்கு அழைத்து வந்து அங்கேயே பராமரித்து வந்தார்.
Advertisement
Advertisement
அந்தப் பாட்டியிடம் ஆசி பெற நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் பாட்டியிடம் ஆசி பெற வந்த ஈரோடு மாவட்டம், பொலவக்காளிபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் சிலர், பாட்டியை அழைத்துச் சென்று அருள்வாக்கு கூறுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மருத்துவர் நடராஜனிடம் இருந்து பாட்டியை பிரிக்க, வயதான அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜீவசமாதி செய்ய முயற்சி செய்கிறார்கள் என்ற தவறான தகவலை கரூர் மாவட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கரூர் கோட்டாட்சியர் மூலம் தனிக் குழு அமைக்கப்பட்டு பாட்டியை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பாட்டி என்னை நொய்யலில் விட்டுவிடுங்கள் எனக் கூறி வருகிறார்.
எனவே பொய்யான தகவலைக் கூறி எங்களிடம் இருந்து பிரிக்க முயலும் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியினருக்கு அருள்வாக்கு கூறி வரும் சித்தர் பாட்டியை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் த. ஜெயந்தி கூறுகையில், இதுதொடர்பாக குழு அமைத்து விசாரித்து வருகிறோம். உண்மை நிலவரம் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.