அதிகளவில் பால் கொள்முதல் செய்ய உத்தரவு
அதிகளவில் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என ஆவின் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டுத் துறை ஆணையரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குநருமான சுனில்பாலிவால்.
அதிகளவில் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என ஆவின் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டுத் துறை ஆணையரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குநருமான சுனில்பாலிவால்.
கரூர் தோரணக்கல்பட்டியில் திருச்சி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஆவின் பால் குளியிருட்டும் நிலையத்தை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி முன்னிலையில் ஆய்வு செய்தார்.
முன்னதாக குளிரூட்டும் நிலையத்தில் அமைந்துள்ள பரிசோதனை தரக் கட்டுப்பாட்டு பிரிவு அறையை ஆய்வு செய்த அவர், அங்கு பால் பரிசோதனை கருவிகள் சரியாக இயங்குகிறதா, குளிரூட்டும் இயந்திரம், குளிரூட்டப்பட பயன்படும் தண்ணீர் செல்லும் குழாய்கள், கம்பிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் ஆவின் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ள சுற்றுப்புறச் சூழலையும் ஆய்வு மேற்கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும், பொதுமக்களிடமிருந்து அதிகளவில் பால் கொள்முதல் செய்வதற்குரிய பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
ஆவின் பொது மேலாளர்கள் தனசேகரன், லோகிதாஸ், துணைப் பதிவாளர் ஜெயராமன், ஆவின் மேலாளர் துரையரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.