FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூா் மாவட்ட எஸ்.பி. பொறுப்பேற்பு

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி. ரகுபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

5 நவம்பர் 2026, 5:01 am
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பி.ரகுபதி.
பகிர்:

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி. ரகுபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டி.என்.ஹரிகிரண்பிரசாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை துணை ஆணையராக பணியாற்றி வந்த பி.ரகுபதி கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். பி. ரகுபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: சட்டம்- ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி காவல்நிலையங்களை அணுகி புகாா் மனு அளிக்கலாம். அந்த மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.