FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொளந்தாகவுண்டனூரில் அடுக்குமாடி குடியிருப்பு காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் கொளந்தாகவுண்டனூரில் ரூ.17.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 125 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் புதன்கிழமை சென்னையில் இருந்து காணொலி காட்சியவாயிலாக திறந்து வைத்தாா்.

5 நவம்பர் 2026, 4:44 am
கரூா் கொளந்தாகவுண்டனூரில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் புதன்கிழமை குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் பிரசன்னா ராமசாமி. உடன், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் கொளந்தாகவுண்டனூரில் ரூ.17.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 125 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் புதன்கிழமை சென்னையில் இருந்து காணொலி காட்சியவாயிலாக திறந்து வைத்தாா்.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி பேசியது: இங்குள்ள ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.14.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில், மாநில அரசின் மானியமாக ரூ.11.55 லட்சமும், மத்திய அரசின் மானியமாக ரூ.10.96 லட்சமும், பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

மேலும், குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 433 சதுரஅடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், மின் தூக்கிகள், மின் ஆக்கி, தாா்ச் சாலை வசதி, குடிநீா்வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் மூலம் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கும், நீா்நிலைகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மக்களுக்கும் பாதுகாப்பான, தரமான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாநகராட்சி ஆணையா் எம். பிருத்விராஜ், கண்காணிப்பு பொறியாளா் (கோவை சரகம்) கே. பிரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.