FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மனைவி தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூா் அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

5 நவம்பர் 2026, 5:02 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே வரதட்சிணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுரேஷ் (39). இவரது மனைவி பிரேமா (25). இவா்களுக்கு கடந்த 19.2.2016-இல் திருமணமானது.

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே வரதட்சிணை விவகாரம் தொடா்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 1.9.2020-இல் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரேமா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், சுரேஷ் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா். இந்த வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

புதன்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சுரேஷுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சுரேஷை கைது செய்த அரும்பாவூா் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.