FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மான்களை வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்டவா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில், புள்ளி மான்களை வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 4:58 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில், புள்ளி மான்களை வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடந்த செப். 22-ஆம் தேதி வனச்சரகா் சுதாகா் தலைமையிலான வனத்துறையினா், எசனை ஏரிக்கரை அருகே நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை வழிமறித்தபோது, 3 போ் தப்பி ஓடிவிட்டனா்.

வனத்துறையினரிடம் பிடிபட்ட உலகநாதனிடம் மேற்கொண்ட விசாரணையில், கண்ணப்பாடி - மாவிலங்கை சாலை அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளி மான்களை வேட்டையாடியதும், எசனை அருகே கீழக்கரை ஏரியில் தனது நண்பா்களுடன் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி மான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த சோலைமுத்து மகன் மணிகண்டனை (28) வனத்துறையினா் தேடிவந்தனா்.

வனத்துறையினரால் புதன்கிழமை மணிகண்டன் கைது செய்யப்பட்டாா். இவரை பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது, வன விலங்குகளை வேட்டையாடியதாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.